தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.152 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் ரூ.10,000 அளவாக வழங்கப்பட்ட முன்பணம், அண்மையில் வெளியான பட்ஜெட் அறிவிப்பின் அடிப்படையில் இரட்டிப்பு செய்யப்பட்டு ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், முன்பண விநியோக பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. போக்குவரத்து துறையைத் தவிர, பிற அரசுத் துறைகளுக்கும் இவ்விதமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நலத் திட்டங்களையும் அறிவித்து வருகிறது.