தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக யார் பேசினாலும், அவர்களை “திமுகவின் கொத்தடிமைகள்” என விமர்சிப்பது கட்சித் தொண்டர்களின் வழக்கமான நடைமுறையாகி விட்டது.
சமீபத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகத் தரப்பை கடுமையாக விமர்சித்து, தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையடுத்து, சில தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், நீதிபதியையே குறிவைத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவு செய்யத் தொடங்கினர். இதனால், சட்டரீதியான விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் கட்சித் தலைமையில் உருவாகியுள்ளது.
நீதிபதியை யாரும் விமர்சிக்காதீர்கள், எந்த போஸ்ட்லயும் போய் கமெண்ட் எதுவும் பண்ணாதிர்கள் 🙏🏻
அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல “அரசாங்கம், நாட்டுக்கு எது நல்லது எது கெட்டதுனு முடிவெடுப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையை தளபதிக்கு விசுவாசம இருப்பது மட்டும் தானே தவிர வாழ்க்கையை இழப்பது அல்ல.
— TVK Head Office (@TVK_HeadOffice) October 3, 2025
“>
இதனைத் தொடர்ந்து, டிவிகே (தமிழக வெற்றி கழகம்) தலைமை நிர்வாகிகள் தங்கள் தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “நீதிபதியை யாரும் விமர்சிக்கக்கூடாது; எந்தப் பதிவிலும் கருத்து பதிவு செய்யாதீர்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, நாட்டின் நலனுக்காக தீர்ப்பளிப்பவர்கள்.
தளபதிக்கு விசுவாசமாக இருப்பது நல்லது, ஆனால் அதற்காக வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்க வேண்டியதில்லை” என அவர்கள் சமூக வலைதளங்களில் அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் “நீதிபதியை விமர்சிக்கும் அளவுக்கு அரசியல் அறிவற்றவர்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
