பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த இந்து மதத்தைச் சேர்ந்த வீரராக டேனிஷ் கனேரியா இருந்தவர். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணிக்காக லெக்ஸ்பின் பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.
சமீபகாலமாக இந்தியாவை பற்றி பல நேர்மையான கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில், இந்திய குடியுரிமை பெறுவதாகப் பரவும் வதந்திகளுக்கு தற்போது அவர் நேரடியாக பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார நிலை, செயல் திறன் போன்றவற்றை தொடர்ந்து பாராட்டி வரும் டேனிஷ் கனேரியா, ‘இந்தியா என் தாய்நாடு. இது எனக்கு கோவிலுக்கு சமம். ஆனால், தற்போது இந்திய குடியுரிமைக்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்வதில்லை.
எதிர்காலத்தில் என்னை போன்றவர்களுக்கு இந்தியாவிற்கு வர விருப்பம் இருக்கலாம். அப்போது சிஏஏ (CAA) சட்டம் உள்ளது. எனது விதி பகவான் ஸ்ரீராமரின் கைகளில் உள்ளது. ஜெய் ஸ்ரீராம்!’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது முன்னோர்கள் குஜராத்தத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாய் இந்தியாவிலேயே பிறந்தவர். சூரத்தில் வாழ்ந்து வந்த குடும்பம் பின்னர் பாகிஸ்தானின் கராச்சிக்கு குடியேறியது. ஆனால் தனது வேர்கள் இந்தியாவுடன் இணைந்தவை என்பதால், தொடர்ந்து இந்தியா சார்ந்த கருத்துகளை பதிவிடும் டேனிஷ் கனேரியா, எந்த அரசியல் நோக்கமுமின்றி, மதத்திற்கு எதுவரைக்கும் திடமாக நிற்பேன் என்றும், தேச விரோத எண்ணங்கள் மற்றும் போலி மதசார்பற்ற குரல்களை அம்பலப்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
