நம்மைச் சுற்றியுள்ள உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், மனிதநேயமும் கருணையும் குறைவடைந்து வருவதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும், சில நேரங்களில் அத்தகைய எண்ணங்களை முற்றிலும் மாற்றும் சம்பவங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது,
அத்தகைய ஒரு மனதைத் தொடும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், இந்திய ரயிலில் தினமும் தேநீர் விற்பனை செய்து வரும் ஒருவர், சோர்வால் தூங்கிவிடுகிறான். அந்த நேரத்தில், அங்கு வருகைதந்த ஒரு போலீஸ்காரர், அவரது நிலையைப் பார்த்ததும், தன்னுடைய பொறுப்பாகவே அவர் விற்றுக் கொண்டிருந்த தேநீரை பயணிகளுக்கு வழங்கத் தொடங்குகிறார். தொடர்ந்து, பலர் இடையே நடமாடி தேநீர் பரிமாறிய அந்த போலீஸ்காரர், விற்பனையிலிருந்து பெறப்பட்ட பணத்தை பின்னர் அந்த தேநீர் விற்பனையாளரிடம் ஒப்படைத்துக் கொடுப்பதும் காணொளியில் தெளிவாக காணப்படுகிறது.
Humanity at best❤️
A tea-seller, tired of walking through train selling hot tea, finally gives in to exhaustion & falls asleep. A policeman sees that & takes upon himself to sell tea to passengers on his behalf. On getting up, policeman gives him a hug & all money collected by… pic.twitter.com/7uPGrcRg3S
— BhikuMhatre (@MumbaichaDon) October 3, 2025
இந்த 43 வினாடிகள் கொண்ட வீடியோ, @MumbaichaDon என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது. மேலும், 7,000-க்கும் அதிகமான மக்கள் இதனை லைக் செய்ததுடன், பலரும் உணர்வுபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் இது பற்றி ஒருவர், “இதுதான் உண்மையான போலீஸ்காரர் – கடமையிலும், கருணையிலும் சிறந்தவர்!” என்றார், இன்னொருவர், “மனிதநேயம் இன்னும் நம்மிடையே உயிருடன் இருப்பதை இந்த காணொளி நிரூபிக்கிறது”
என்று கருத்து தெரிவித்துள்ளார்.
