கரூர் துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த சம்பவம் தொடர்பான விசாரணை அதிதீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. விசாரணை மையத்தில் இருக்கின்ற நீதிபதிகள், “இது என்ன மாதிரியான கட்சி?”, “விஜய்க்கு தலைவர் பண்பு  இல்லை” என்ற கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருப்பது, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை மீது நேரடி குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இனி இதுபோன்ற சோகம் நிகழாத வகையில், “மறு உத்தரவு வரும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை” என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கும் சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில், “மறு உத்தரவு வரும்வரை எந்த அரசியல் கட்சிக்கும் நெடுஞ்சாலைகளில் கூட்டம் இல்லை – உயர்நீதிமன்றம்! உன்னால் இனி என்னென்ன நடக்கப் போகுதோ! @TVKVijayHQ” என மோசமான தாக்கத்துடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.