கரூரில் நடந்த துயர சம்பவம் பற்றிய பாதிப்புகள் இன்னும் நீங்காத நிலையில், அதே நிகழ்வில் ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. நிகழ்வுக்கு விஜய் மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டும், அவர் தாமதமாக வந்தது தான் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட காரணமாக இருந்தது என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவரது வருகை நேரத்தை திட்டமிட்டு தெரிவிக்காமல், கூட்டத்தை முன்னதாகவே அழைத்துவைத்தது, பொது மக்களிடையே தவறான எதிர்பார்ப்பு உருவாக காரணமானதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த தாமதம் ஒரு நடிகருக்கேற்ப பொறுப்பற்ற செயல் எனக் கூறி, “பணம்வாங்கும் திரைப்படங்களில் punctuality முக்கியமா பின்பற்றுபவர், ஆனால் மக்களை சந்திக்க வேண்டிய பொழுது தாமதமா வருவது ஏன்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்தே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி இடும்புவனம் கார்த்தி, விஜய் அவர்களின் “சிவகாசி” படப்பிடிப்பு போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விஜய், “நான் எப்போதும் நேரத்திற்கு வருவேன், தாமதம் எனக்கு பிடிக்காது” எனக் கூறியிருந்த காணொளியை பகிர்ந்த கார்த்தி, “படப்பிடிப்பு என்றால் punctualityயை பின்பற்றுவார்… பரப்புரை என்றால் இஷ்ட ம*ருக்குச் செல்வார்” என கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இவரது பதிவும், விமர்சனமும் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பரவி, இது அரசியல் நாகரிகமா ? என்ற விவாதத்தை புதிதாக கிளப்பியுள்ளது.
படப்பிடிப்பு என்றால், Punctualityயைப் பின்பற்றுவார்.
பரப்புரை என்றால், இஷ்ட மயிருக்குச் செல்வார். pic.twitter.com/G7QPHQ16rV
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 1, 2025
