புகழ்பெற்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரி-ஐ  நினைவூட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பூனையும், ஒரு எலியும் வீட்டுக்குள் நடந்துகொண்டிருக்கும் விளையாட்டுத் துரத்தலை சித்தரிக்கிறது.

இந்த வீடியோ Instagram-ல் ஒருவர் பதிவிட்ட வீடியோவாகும். இதுவரை 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், மேலும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு அறையில் உள்ள எலி ஒன்று சுறுசுறுப்பாக ஓடுகிறது, அதை பூனை ஒன்று தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கிறது. எலி தன்னை பாதுகாக்க பல யுத்ததந்திரங்களை பயன்படுத்துகிறது – ஒருசமயம் படிக்கட்டுகளுக்கு ஏறுகிறது, மறுநேரம் வாளியின் பின்னால் ஒளிகிறது, சில நேரங்களில் திடீரென ஓடிவிடுகிறது.

மேலும் மறுபுறம், பூனைக்கும் வேகத்தில் பஞ்சமில்லை. இடைவிடாமல் துரத்தி, எலியைப் பிடிக்க பல முறை முயற்சிக்கிறது. இறுதியில், படிக்கட்டுகளில் பூனை எலியை பிடிக்கும் காட்சி காணொளியின் முடிவில் இடம்பெறுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் குழந்தைப் பருவ நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இது உண்மையான டாம் அண்ட் ஜெர்ரி தான். பின்னணி இசையும் அதேதான்!” என்று குறிப்பிட, இன்னொருவர் “இதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் மீண்டும் பார்ப்பேன்” என்று எழுதியுள்ளார்.