உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மீரட் நகரில் உள்ள எஸ்.பி. சிட்டி இல்லத்துக்கு முன்பு ஒரு பெண் மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.
மாணவி ஒரு மின்சார ரிக்ஷாவில் அமர்ந்திருந்தபோது, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ஆபாச சைகைகள் செய்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பெண், பொது இடத்தில் அந்த இளைஞரை ஐந்து நொடிகளில் ஐந்து முறை அறைந்து தாக்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
मेरठ
5 सेकेंड 5 थप्पड़
साकेत चौराहे पर ई-रिक्शा में युवती से छेड़छाड़ कर रहे मनचले की सरेराह युवती ने की थप्पड़ों से पिटाई।
5 सेकंड में पांच थप्पड़ का देखे वीडियो वायरल। pic.twitter.com/eoGcQlm5D6— Shanu Bharty (@ShanuMedia) September 26, 2025
வீடியோவில், ஒரு பெண் அந்த இளைஞரின் காலரைப் பிடித்து இழுக்க, மற்றொரு பெண் அவரை முகத்தில் தொடர்ந்து அறையும் காட்சி பதிவாகியுள்ளது.
பின்னர், மற்றொரு பெண்ணும் அந்த இளைஞரை பலமுறை அறைந்தார். இந்த சம்பவத்தைச் சுற்றி கூட்டம் கூடியது. சுமார் அரை மணி நேரம் பொது இடத்தில் இந்த தாக்குதல் நீடித்ததாகவும், பின்னர் காவல்துறை வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி முறையாக புகார் அளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், ஹர்ஷ் என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞரை காவல்துறை காவலில் எடுத்துள்ளது.
