தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கவிதையுடன் தன்னுடைய பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடப்பதாக குற்றம் சாட்டினார். விசைத்தறி பெண்களை குறி வைத்துதான் கிட்னி திருட்டு அதிக அளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் வாக்குறுதிகளில் அடுத்து வெளிவரும்.

அதன்பிறகு என் மீது இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கீங்களா.? நான் 2, 3 வாரத்துக்கு முன்னாடி என்னமோ ஏதோ நினைச்சேன். நண்பா நண்பீஸ்  ஒரு கை பார்த்துடலாம் சத்தியமா பார்த்திடலாம். மேலும் கிட்னி திருட்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதித்துள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு கண்டிப்பாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.