காஞ்சிபுரம் மாவட்டத்தின் சித்தாமூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தங்கள் கட்சியிலிருந்து விலகி, இன்று (செப்.26) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நிகழ்ச்சியில், இவர்கள் தங்களை திமுகவில்  இணைத்து கொண்டனர். இது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி திமுகவின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஏற்பட்ட முக்கியமான அணிசேர்வாகக் கருதப்படுகிறது.

இந்த அணிதிருப்பில், பாஜகவில் இருந்து பி.அமீர் பாஷா, எஸ்.பாஸ்கர், ஏ.சண்முகம், அதிமுகவில் இருந்து எம்.அன்பழகன், ஜி.சசிகுமார், மணிகண்டன், பாமகவில் இருந்து ஏ.நரேஷ், வி.நாராயணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

“>

 

மாநில அரசின் செயல்பாடுகள், முதல்வரின் ஆட்சி திறன் மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் நம்பிக்கை கொண்டு, தாங்கள் திமுகவில் இணைய முடிவெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு, காஞ்சிபுரம் மாவட்ட அரசியலில் திமுகவுக்கு புதிய ஊக்கமளிக்கக்கூடிய ஒரு முக்கிய வளர்ச்சியாகக் காணப்படுகிறது.