தமிழகம் முழுவதும் கடந்த 18ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் கடந்த 26 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை முடிவடைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்துள்ளது.

அதாவது காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டி தனியார் பள்ளி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்