ஜெய்ப்பூர் சுற்றுலா பயணத்தில் இருந்த ஒரு வெளிநாட்டு ஜோடி, கால்டாஜி பகுதியிலொரு அழகான நினைவாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விருந்தினராக ஒரு குரங்கு வந்தது. அந்த ஜோடி மகிழ்ச்சியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்க, ஒரு குரங்கு திடீரென ஆணின் தோளில் ஏறி அமர்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவில், முதலில் குரங்கு அமைதியாக தோளில் அமர்ந்திருக்கும் காட்சி தெரிகிறது. அதற்குப் பிறகு, சரியாக கேமராவை நோக்கி புன்னகை புரிந்து, அதுவும் ஒரு “போஸ் மாஸ்டர்” போல நடித்தது. அந்த குரங்கு அப்படியே ஜோடியின் ரொமான்டிக் புகைப்படங்களை, காமெடியாக மாற்றியது. இந்த இனிய சம்பவம் சிரிப்பும் மகிழ்ச்சியையும் தருவதுடன், அந்த ஜோடியின் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.
இந்த வீடியோவை @jaipur\_ka\_tukda என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்ததும், அது விரைவில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. “க்யூட்டஸ்ட் போட்டோபாம்பர்!” என்று சிலர் குரங்கை பாராட்ட, “போன் பறிச்சுக்கிட்டு ஓடிருமோனு பயம் தான்!” என்று மற்றொருவர் கமெண்ட் போட்டிருந்தார். சமூக வலைதளங்களை கலக்கும் இந்த குரங்கின் சிறிய சேட்டை, அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
