சீனாவில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தக் கழிப்பறையில் டிசூ பேப்பர் எடுக்க வேண்டும் என்றால், முதலில் தங்களுடைய மொபைல் போனில் QR code-ஐ ஸ்கேன் பண்ணணும். அதுக்கப்புறம், அவருடைய போன்ல ஒரு சிறிய விளம்பரம் ஒளிபரப்பாகும். அந்த விளம்பரத்தை பார்த்த பிறகுதான் டிசூ பேப்பர் மெஷினிலிருந்து வெளியே வரும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Inside History (@insidehistory)

இந்த வீடியோ வைரலாகியதற்குப் பிறகு, பலரும் தங்களது கருத்துகளை வித்தியாசமான விதங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதைப் பார்த்து, “நல்ல யோசனைதான், வீணான டிசூ பயன்பாட்டைத் தடுக்க இது ஒரு நல்ல முயற்சி” என்று பாராட்டுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ, “இது சும்மா ஒரு டிசூ எடுக்க கூட போன்ல அடர்டைச்மெண்ட் பார்பதா?” என்று கடுமையாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக, “நடுவில் நெட் கிடைக்காமல் போனா என்ன பண்றது?”, “ஃபோன் charge இல்லைனா… சிக்கல்தான்!” என்ற காமெடி கருத்துகளும் வலைதளங்களில் மழையாக விழுகின்றன.

இந்த செயல்முறை ஒரு வகையில் தைரியமான முயற்சியாயிருந்தாலும், மற்றொரு பக்கம் பொதுமக்களின் தேவைகளில் தனியுரிமையை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. சிறிய தேவைக்கு இவ்வளவு டெக்னாலஜி தேவைப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், கூடுதல் டிசூ தேவைப்பட்டால், அதற்காக 0.5 யுவான் செலுத்த வேண்டியிருப்பதையும் மக்கள் சிலர் ஆட்சேபனையுடன் எதிர்கொள்கின்றனர்.