அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சந்தித்த பல நிர்வாகிகள் கடந்த நாட்களில் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், அவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி, கட்சி வட்டாரங்களில் ஆர்வம் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு இன்று (செப்டம்பர் 24) இரவே வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் கோபி வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் வரவேற்கச் செல்லாததும், அவரது நிலைப்பாட்டை சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளது. இதனால், செங்கோட்டையன் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.