சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரை மிரள வைத்துள்ளது. ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது படுக்கையையே காராக மாற்றி, சாலையில் ஓட்டும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வகை வாகனம் பார்த்ததும் நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைத்துள்ளது.
पूरा कार कंपनी में डर का माहौल है, अमेरिका क्या कहता था?😂🤣🔥 pic.twitter.com/SKcdn07qr1
— Toofan Ojha (@RealTofanOjha) September 21, 2025
வீடியோவில், ஒரு கட்டிலின் மீது ஸ்டியரிங், ஹெட்லைட்கள், இஞ்சின், ஆக்சிலேட்டர், பிரேக் என அனைத்து அம்சங்களும் அமைக்கப்பட்டு, அதன் மீது நிம்மதியாக படுத்துக்கொண்டு ஒருவர் வாகனம் ஓட்டுவது காணப்படுகிறது. இவருடன் மேலும் சிலர் அந்த ‘படுக்கை வாகனத்தில்’ பயணம் செய்து வருகின்றனர். மெட்டல் ஷீட்டுகளால் அதை ஓர் இயற்கை கார் போல மாற்றி அமைத்துள்ளதோடு, அதன் செயல்திறன் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இந்த வீடியோவை X பக்கத்தில் @RealTofanOjha எனும் கணக்கு பகிர்ந்துள்ளார். இதனை இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கருத்துப் பகுதிகளில் நகைச்சுவை, பாராட்டுகள், கலாய்ப்புகள் என பல விதமான கருத்துக்கள் பொங்கி வருகின்றன. “அமெரிக்காவே இப்போ எங்கள திறமையை பார்த்து பொறாமை படும்!” என ஒருவர் பதிவிட்டிருக்க, “கார் நிறுவனங்கள் இப்போ ஆபத்துல தான்!” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
