சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சலூனில் வைக்கப்பட்டிருந்த பூஜைத் தட்டில் இருந்து பணத்தைத் திருடும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளதால், பார்ப்பவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை எக்ஸ் கணக்கில்  பகிரபட்டுள்ளதுள்ளது.

வீடியோவில், ஒருவர் சலூனின் வரவேற்பறையில் உள்ள பூஜைத் தட்டில் இருந்து பணத்தை எடுத்து, தன் பையில் திணித்து, பின்னர் அமைதியாக அங்கிருந்து வெளியேறுவது தெரிகிறது.

வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தத் திருட்டு நடக்கும்போது அருகிலேயே ஒரு பாதுகாப்பு ஊழியர் நின்றிருந்தார். ஆனால், அவருக்கு இந்தத் திருட்டு பற்றி எந்தச் சந்தேகமும் எழவில்லை. வீடியோவில், இருவர் இணைந்து இந்தச் சம்பவத்தைச் செயல்படுத்துவது தெரிகிறது;

ஒருவர் வரவேற்பாளரைப் பேச்சில் மூழ்கவைத்து கவனத்தைத் திசைதிருப்ப, மற்றவர்  பணத்தைத் திருடுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கோபத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர், “பூஜைத் தட்டில் இருந்து பணம் திருடும்போது கை நடுங்கவில்லையா?” என்று கேள்வி எழுப்ப, மற்றொருவர், “இவனுக்கு இப்போது கடுமையான தண்டனை காத்திருக்கிறது!” என்று கிண்டலடித்தார். பாதுகாப்பு ஊழியரின் கவனக்குறைவையும் பலர் விமர்சித்து, “இப்படிப்பட்ட பாதுகாப்பு எதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.