கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் தான் கிருதி. இந்நிலையில் கிருதி மைசூரு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்தபோது தசரா யானைகளுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கிடையில் தசரா யானைகளை அருகில் சென்று பார்க்க பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி மொபைலில் பிளாஸ் ஆன் செய்து தசரா யானைகளை புகைப்படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
எனினும் கிருதி நள்ளிரவு நேரத்தில் தன் தோழிகளுடன் கரிகல்லுதொட்டி வழியே அரண்மனை வளாகத்திற்குள் சென்று தசரா யானைகளுடன் வீடியோ எடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளிவந்த நிலையில் கிருதி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தசரா யானைகளுடன் ரில்ஸ் வீடியோ எடுத்த கிருதி மீது வனத்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்துள்ளனர்.
