சோசியல் மீடியாவில் தற்போது ஒரு வீடியோ அதிரடியாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. பசுமை காடுகளின் நடுவே, ஒரு சிறிய மான்குட்டியை முத்தமிடும் சிங்கத்தின் அன்பு நெட்டிசன்களின் இதயங்களை உருகவைத்துள்ளது. @AmazingSights என்ற X பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், பொதுவாக விலங்குகளை வேட்டையாடும் பாவனையில் காணப்படும் சிங்கம், இப்போது ஒரு மான்குட்டியைக் கண்ணின் மணியாக பாதுகாத்து பராமரிக்கிறது.

 

வீடியோவில், அந்த சிங்கம் அந்த மாலை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறது. ஆனால் பயந்து போன அந்த மான் எழுந்து ஓட முயற்சி செய்தது. அப்போது அந்த சிங்கம் தனது கைகளால் மானை இழுத்து வைத்து மீண்டும் தனது பாசத்தை பொழிந்தது. இதைப் பார்த்த பலரும், “இது வேட்டை அல்ல, இது இரக்கம்”, “தாய்மையை காட்டும் சிங்கம்” என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், சமூக வலைதளங்களில் இது பற்றிய இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் “இந்த பாசம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?” என சந்தேகப்பட, மற்றொருபக்கம் “சிங்கம் சாப்பிட வேணும்னா உடனே சாப்பிடும்.. ஆனா இது உண்மையான இரக்கம்” என நம்புகிறார்கள். விலங்குகளுக்கும் உள்ளுணர்வுகள் உண்டு என்பதை இந்த வீடியோ தெளிவாக நிரூபிக்கிறது,