அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நாடும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை ஆண்டுதோறும் 1,00,000 டாலராக உயர்த்தும் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியர்களுக்கு புதிய தடையாக உருவெடுத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியர்களாவதால், இந்த புதிய கட்டண நிலைமை அவர்கள் அமெரிக்கா செல்லும் வாய்ப்புகளை குறைக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் மகேந்திர தேவ், இந்த கட்டண உயர்வை நேர்மறையாகவே பார்க்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த கட்டண உயர்வு இந்தியர்களை தங்கள் நாட்டிலேயே தொழில் தொடங்க ஊக்குவிக்கும். பெங்களூரு, ஐதராபாத், குரேகான் போன்ற நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெருகும். இது ‘விக்சித் பாரத்’ நோக்கில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வெளிநாட்டு அமைச்சகம், இந்த கட்டண உயர்வு குடும்பங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், மனிதநேய அடிப்படையில் இது கவலையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
