“பணமல்ல… உணர்வுதான் உண்மையான பரிசு” என்பதை உரைக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு தந்தை, தனது மகனுக்குத் தரும் ஒரு எளிய பரிசு, அந்த சிறுவனுக்கு மட்டும் அல்லாமல், வீடியோ பார்த்த அனைவரின் கண்களில் நீர் வரும் அளவிற்கு நெகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த வீடியோ, நம் சிறுவயது நினைவுகளை திரும்பக் கொண்டு வந்தது என நெட்டிசன்கள் பதிவு செய்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Trolls Official (@trolls_official)

வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகனை கண் கட்டி வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று, ஒரு துணியால் மூடிய பொருளை காண்பிக்கிறார். அதை திறக்கும் போது, அந்த குழந்தை நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட சைக்கிள் இருந்தது. மகன் அந்தக் காட்சியை பார்த்தவுடனே வியப்புடன் தந்தையை கட்டிப் பிடிக்கும் அந்த நிமிடம், பார்ப்பவர்களை உணர்வில் ஆழ்த்துகிறது. அந்த சந்தோஷம், அந்த பாசம், பணத்தால் வாங்க முடியாத பரிசு.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதுடன், விரைவில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. “இந்த வீடியோவ பார்த்ததும் எனக்கே என் அப்பா சைக்கிள் வாங்கித் தந்த நாள் ஞாபகம் வந்தது,” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “இந்த வீடியோவுல பரிசு மட்டும் கிடையாது, பாசமும் நெஞ்சை நெகிழவைக்கும் உணர்வுகளும் இருக்கு” என கூறியிருந்தார்.