சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, தவெக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக பல்வேறு மாற்றுக்கட்சியினரை தங்களுடன் இணைத்து வலிமை சேர்த்துக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவும் தனது அணியை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதோடு, திமுக மீது அதிருப்தி கொண்டவர்கள் மற்றும் அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற முடியாத  பலரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் புதிய அசைன்மென்டை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரவிருக்கும் தேர்தலுக்கான அதிமுகவின் வலுவான அரசியல் திட்டமாகக் கருதப்படுகிறது.