அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ், இன்று (செப்.18) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், அப்போது தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அன்வர் ராஜா, மைத்ரேயன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளியான மருது அழகுராஜின் சேர்க்கையும் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது இணைவு, OPS ஆதரவாளர்கள் இடையேயான அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும், திமுகவின் தென் மாவட்ட வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.