பொதுவாக பிளிங்கிட் போன்ற விரைவு டெலிவரி சேவைகள் இருசக்கர வாகனம் மூலமாக பொருட்கள் வழங்குவது தான் வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. ஒரு பெண் வாடிக்கையாளருக்கு, பிளிங்கிட் மூலம் ஆர்டர் செய்த பொருட்கள் லக்ஸுரி எஸ்யூவி மஹேந்திரா தார் காரில் வந்து டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Divya Srivastava (@divyagroovezz)

இந்த வீடியோவை @divyagroovezz என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பாய், இவர் தார் கார்ல டெலிவரி பண்ண வந்திருக்காரு!” என ஒருவர் ஆச்சரியமாக பேசும் குரலும் கேட்கிறது. ஒரு சாதாரண பிளிங்கிட் ஆர்டர் செய்த இந்த வாடிக்கையாளர், சில நிமிடங்களில் தனது வீட்டின் வாசலில் ஒரு கருப்பு மஹேந்திரா தார் காரை பார்த்து வெகுவாக ஆச்சரியப்பட்டார்.

காரில் இருந்த டெலிவரி பாய் இறங்கி வந்து பொருட்களை வழங்கும் காட்சி, நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிளிங்கிட் நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. பலரும் இது அந்த பிரான்சின் சொந்த கார் அல்லது டெலிவரி பாய் தற்காலிகமாக தன் சொந்த வண்டியை பயன்படுத்தியிருக்கலாம் என வாதிடுகின்றனர்.

ஒரு நெட்டிசன் கமெண்டில், “சில பேர் நேரம் போக்குக்காக இப்படியும் பண்ணுவாங்க. எனக்கும் ஸ்கார்பியோ வண்டியில் டெலிவரி வந்து இருக்கே!” என கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும், இந்த வித்தியாசமான டெலிவரி ஸ்டைல், இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.