சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடிகர் சிம்புவை திருமணம் செய்வேன் என கூறியதால் அது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, சிம்புவின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான டி. ராஜேந்தர், இதுகுறித்து தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். “என் மகனை உண்மையாக நேசிக்கும் ஒரு பெண்ணை கடவுள் அருள வேண்டும். நாங்கள் கட்டாயப்படுத்தினால் சிம்பு மறுக்க மாட்டான். ஆனால், நாங்கள் ஒருபோதும் அவனை கட்டாயப்படுத்த விரும்பவில்லை” என அவர் மிக உணர்வுப்பூர்வமாக கூறியுள்ளார்.

மேலும், “என் மகன் எப்போது திருமணம் செய்தாலும், அதை அவன் மனதார விரும்பும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். என் மகனுக்காக எல்லா பெற்றோர்களும் ஆசைப்படும் மாதிரியான வாழ்க்கைத்துணை வர வேண்டும். அது ஒரு சிறந்த குடும்பத்தையும், மனதார நேசிக்கும் ஒரு பெண்ணையும் கொண்டிருக்க வேண்டும்” என டி.ராஜேந்தர் தெரிவித்தார். இவரது இந்த பேச்சு, சிம்புவின் திருமணம் குறித்த பல்வேறு வதந்திகள் நடக்கும் நேரத்தில் உணர்வுபூர்வமாகவும், தெளிவாகவும் பேசப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.