உத்தரப்பிரதேச மாநிலம் ஜலோனில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற கொடூரமான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லவி என்ற 21 வயது இளம்பெண் தனது காதலர் தீபக்குடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென அறைக்குள் நுழைந்த பாட்டி பரமாதேவி (வயது 75) இருவரையும் நேரில் பார்த்துள்ளார். இதனால் பதறிப்போன பல்லவி, தனது காதலருடன் சேர்ந்து பாட்டியை அம்மிக்கல்லை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்னர் சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பல்லவி, “திருடர்! திருடர்!” என கூச்சலிட்டு குடும்பத்தினரை வரவழைத்துள்ளார். அவரது தந்தை “தெரியாத நபர்கள் செய்திருக்கலாம்” என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது. பல்லவி உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், தீபக் தப்பித்து ஓடி விட்டார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

பல்லவியிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது, பாட்டி இதை வெளியே சொல்லிவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் ஊரு இழிவாக பார்க்கும். அதனால் தான் இந்த கொலையை செய்தேன் என்று பல்லவி ஒப்புக்கொண்டார். இதை அடுத்து தலைமுறைவாக உள்ள தீபக்கை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.