இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனம் ஒரு மாணவனின் வீட்டு முன்பு நிற்கிறது. வாகனத்திலிருந்து இறங்கிய மாணவன், தனது பையை எடுப்பதற்காக வாகனத்தைச் சுற்றி செல்கிறான். அப்போது, சாலையை கவனிக்காமல் சென்ற அவன் மீது, திடீரென வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதுகிறது.

மோதிய வேகத்தில் மாணவன் தூக்கி வீசப்படுவது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது, ஏனெனில் ஒரு சிறு கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.