தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி மார்க்கெட் பகுதியில் அமைந்த எம்ஜிஆர் சிலை முன்பாக நடத்தினார்.
தவெகவின் முதல் பிரசாரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜயை பார்க்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், காலை 10.30 மணிக்கு துவங்க வேண்டிய பரப்புரை நிகழ்ச்சி, கூட்ட நெரிசலால் மாலை 3 மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பரப்புரை நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு பக்தர், விஜய்யின் கையில் ஒரு வேலை அன்புடன் கொடுத்தார். அந்த வேலை, தமிழர்கள் மதிக்கிற முருக பக்தியின் அடையாளமாகவும், சக்தியின் சின்னமாகவும் கருதப்படுகிறது. கையை நீட்டி, எழுத்து நின்று பய பக்தியுடன் அந்த வேலை பெற்ற விஜயின் காட்சி பலரது உள்ளங்களையும் கவர்ந்தது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதுடன், விஜயின் தமிழர் பாரம்பரியத்துக்கான மரியாதையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் கைக்கு வந்த வேல்.. எழுத்து நின்று பய பக்தியுடன் வாங்கிய காட்சி !@TVKVijayHQ pic.twitter.com/HNiX8NvYvW
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) September 14, 2025
“>
