2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி, அதனைத் தொடர்ந்து அரியலூரில் தனது அடுத்த கூட்டத்தை நடத்தினார். பெரும் ஊர்வலத்துடன் வந்த விஜய், அரியலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உருக்கமான பேச்சு ஒன்றை நிகழ்த்தினார்.

“சாதாரண என்னை இவ்வளவு பெரிய அளவில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். அரசியலில் வந்தாலே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்று தொடங்கிய அவர், மக்கள் நம்பிக்கையை காப்பதற்காக எந்த சிறப்பையும் துறக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

“மக்களின் அன்புக்காக எதையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம்” என்ற வார்த்தைகள் அரியலூர் மக்கள் மத்தியில் பெரும் பரவலாக வரவேற்கப்பட்டன. அவர் கூறிய இந்த உரை, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தனக்கான ஆதரவை உணர்த்தும் விதமாக மக்கள் ஆரவாரம் எழுப்ப, விஜய் தனது கட்சி நோக்கங்கள், மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து விளக்கியுள்ளார். அரசியல் என்பது பதவிக்காக அல்ல, பணிக்காக என்ற அவரது பார்வை, இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.