தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில், பள்ளி மாணவிகள் குழுவொன்று 10-ம் வகுப்பு மாணவியை பிளேடால் கீறி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், சமீபத்தில் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பள்ளியின் மாணவிகள் 4 பேர்  அந்த மாணவியை எதிர்த்து நின்று தாக்கினர். தாக்கியதோடு மட்டும் நிற்காமல், பிளேடால் சரமாரியாக கீறியதால், மாணவியின் முகம் மற்றும் முதுகுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொ ண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில், மாணவிக்கு காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு மாணவனுடன் பேசுவதில் தாக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் நடத்திய ஒரு மாணவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை அந்த மாணவி கேலி கிண்டல் செய்து வந்தது நிலையில் சம்பவ நாளில் தாக்குதலும் நடத்தியுள்ளார்.

 

அந்த  பத்தாம் வகுப்பு மாணவியை 16 வயதான இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு 14 வயதுடைய மாணவி தாக்கியது தெரியவந்தது. மேலும் அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.