குஜராத் மாநிலம் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானத்தில் புறப்பட்டவுடன் பரபரப்பு நிலை ஏற்பட்டது. டேக்ஆஃப் ஆன சில நொடிகளிலேயே, விமானத்தின் ஒரு டயர் கழன்று விழுந்தது. இதனை விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் தொடர்ந்து “டயர் விழுந்துவிட்டது” என்று சத்தமாக எச்சரிப்பது பதிவாகியுள்ளது.
A SpiceJet Bombardier Q400 aircraft, with 75 people on board, issued a full-scale emergency at Mumbai’s Airport on Friday after one of its wheels fell off during departure from Kandla in Gujarat.
https://t.co/SjbQ6YsOuW pic.twitter.com/o1h84LBpxd— Richa Pinto (@richapintoi) September 12, 2025
“>
இந்தச் சம்பவத்தால் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக தற்காலிக அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, விமானம் எமர்ஜென்சி நடைமுறைகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
A #SpiceJet aircraft, en route to #Mumbai from #Kandla, experienced a tyre detachment during take-off. The incident prompted the pilots to declare a full emergency upon approach to Mumbai.
More details 🔗 https://t.co/eYGY8zTxAr#Maharashtra #Gujarat #aircraft pic.twitter.com/uXakADYbKL
— The Times Of India (@timesofindia) September 12, 2025
“>
அதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எச்சரிக்கையினால் விமான நிலையத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியிருந்தாலும், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
