திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில், வயதான பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் அருகேயுள்ள கம்பிளியபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனியாக வசித்து வந்த 55 வயது பெண் ஒருவரிடம் அவர் தவறான நோக்குடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, கார்த்திக்  அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, பாலியல் ரீதியாக அத்துமீற  முயன்றதாக தெரிகிறது. உடனே தன்னை பாதுகாத்துக் கொண்ட அந்த பெண், அவரை தள்ளிவிட்டு வீட்டில் இருந்து ஓடி தப்பினார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண், உடனடியாக காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தற்போது அவரது நிலை சீராக உள்ளது.  கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.