மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோலாப்பூர் – துலே நெடுஞ்சாலையில் ரத்னாபூர் கிராமத்திற்கு அருகே, ஓடும் லாரியின் மேல் ஏறிய இரண்டு திருடர்கள், எந்த பயமும் இல்லாமல் பொருட்களை திருடிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. முதலில் லாரியின் தார்பாலினை வெட்டி, பின்னர் அதில் இருந்த பொருட்களை எடுத்து பின்தொடர்ந்து வந்த பைக்கில் இருந்த தங்கள் கூட்டாளிகளிடம் ஒப்படைத்தனர்.
இருவரும் முகத்தை துணியால் மூடியிருந்ததும் வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது. பின்னால் வந்த வாகன ஓட்டுநர்கள் இந்தக் காட்சிகளை மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், அது வேகமாக வைரலானது.
View this post on Instagram
“>
இந்த சம்பவம் வைரலானதை அடுத்து, தாராஷிவ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். திரைப்பட காட்சிகளைப் போல் நடந்த இந்த திருட்டு, அப்பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இது நேரடியாக நடந்ததை நம்பவே முடியவில்லை” என பலரும் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
