இந்திய நேரப்படி நேற்று (செப்டம்பர் 7) இரவு 9.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது.

இந்த நிலை நள்ளிரவு 12.23 மணி வரை, மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது. இதைத் தொடர்ந்து, பகுதி கிரகணம் 1.26 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் 2.25 மணிக்கு புறநிழல் பகுதியிலிருந்து நிலா வெளியேறி, சந்திர கிரகணம் முற்றிலும் முடிவடைந்தது. இது 2022க்குப் பிறகு மிக நீண்ட நேரம் நடந்த சந்திர கிரகணமாகும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

“>

இந்நிகழ்வை இந்தியா, ஆஸ்திரேலியா, ஆசியா, யூரோப் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் கண்டு வியந்தனர். இந்தியாவின் பல பகுதிகளில் மழையால் சந்திர கிரகணம் தெளிவாக காண முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.

“>

இரவு 11.01 மணிக்கு, பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்தபோது, சந்திரனின் நிறம் சிவப்பாக மாறியது. இதனை ‘Blood Moon’ என்று அழைக்கின்றனர். இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் ரசிப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடுத்து முழு சந்திர கிரகணம் 2028-ஆம் ஆண்டில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.