தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் விஜய் இடையே நல்ல நட்பு இருந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, தேமுதிகவும் தவெகவும் கூட்டணி அமைக்கலாம் என்ற கூற்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இரு கட்சிகளின் கூட்டணி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த சாத்தியக்கூறு உறுதியானதா என்பதற்கு ஜனவரி 9ஆம் தேதியிலான தேமுதிக மாநாடு முக்கியமானதாய் கருதப்படுகிறது.
