வரி விதிப்பு விவகாரம் காரணமாக இந்தியா–அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை நீக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து, இருநாட்டு உறவுகளை புதிய பாதைக்கு திருப்பும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் வரி விதிப்பை எதிர்த்து, அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது. அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியை நியாயாகவே கடுமையாக விமர்சித்த நிலையில், இந்தியா தனது முன்னிலை மாற்றி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தியாவின் சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டும் போக்கைத் தொடர்ந்து, டிரம்ப் திடீரென, “மோடி எப்போதும் எனது நெருங்கிய நண்பர்; இந்தியா–அமெரிக்கா உறவுகள் சிறப்பாக உள்ளன” என்று தன் கருத்தை மாற்றிக் கூறினார். டிரம்பின் இந்த கருத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியா–அமெரிக்கா உறவுகளைப் பற்றிய அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாக பாராட்டுகிறேன். அந்த பார்வையை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
மேலும் இந்தியாவும் அமெரிக்காவும், மிக நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய, விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை கொண்டுள்ளன”
என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு, உலக அரசியல் சூழலில் ஏற்படும் மாறுபாடுகளின் பேரில், இந்தியா–அமெரிக்கா உறவுகள் மீண்டும் பழைய திசையில் பயணிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
