குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்ச் மஹாலில் பவகவ் மலைப்பகுதியில் ரோப் கார் சேவை இருக்கிறது. இந்த மலை மீது உள்ள கோவிலுக்கு சரக்கு பொருட்களை ஏற்றிகொண்டு ரோப் கார் சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் ஆறு பேர் சென்றுள்ளனர்.
இந்த ரோப் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரோப் கார் அறுந்து விழுந்தது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஆறு பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
