அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, அதிமுக உள்நிலையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் கருத்துகள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காலியாகிய ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அந்த மாவட்டத்தில் கட்சியின் அமைப்பு செயல்பாடு தடையின்றி நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
