அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் கொடுத்திருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அந்தத் தலைவர்களை நேரடியாகவே கட்சியில் இருந்து நீக்கும் நடைமுறையைப் பின்பற்றுவார். ஆனால், இம்முறை செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கியிருப்பது, அவரை கட்சிக்குள் வைத்துக்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறாரோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், அதிமுக உள்நிலையில் அடுத்தடுத்த மாற்றங்கள் எவ்வாறு அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.