மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் சட்டவிரோத மணல் சுரங்க பணியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கும், அங்கு பணியாற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அஞ்சனா கிருஷ்ணாவுக்கும் இடையே தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.
சோலாப்பூரின் மாதா பகுதியில் சாலை அமைப்புப் பணிக்காக சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுவருவதாக புகார் வந்ததை தொடர்ந்து, அஞ்சனா கிருஷ்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கத் தயாரானனர்.
அப்போது மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேரடியாக துணை முதல்வர் அஜித் பவாரை அழைத்தனர். அவர் டிஎஸ்பி அஞ்சனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “இதனை நிறுத்துங்கள்” என கூறினார். அதற்கு அஞ்சனா, “நீங்கள் துணை முதல்வர் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது? வீடியோ கால் செய்யுங்கள்” என கேட்டார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. “நானே இப்போது உங்களிடம் பேசுகிறேன்… உங்களை மீதான நடவடிக்கையை நானே எடுக்கிறேன்” என அஜித் பவார் சற்று கோபத்துடன் கூற, அஞ்சனா எந்தப் பதற்றமின்றி தனது உறுதியான பதில்களை தொடர்ந்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, அஜித் பவார் வீடியோ கால் மூலம் அவரது அடையாளத்தை உறுதி செய்தபின், போலீசார் இடத்தை விட்டு நகர்ந்தனர்.
‘मैं डिप्टी चीफ मिनिस्टर बोल रहा हूं, एक्शन रोको, तुम पर एक्शन लूं क्या?, इतनी डेरिंग है तुम में?’
महाराष्ट्र के सोलापुर में करमाला की पुलिस उपाधीक्षक अंजलि कृष्णा और उपमुख्यमंत्री अजित पवार के बीच फोन और वीडियो कॉल वायरल#Maharashtra | #ViralVideo | #AjitPawar pic.twitter.com/qh7VSe55bC
— NDTV India (@ndtvindia) September 4, 2025
“>
அஞ்சலி கிருஷ்ணா – ஐயா, தயவுசெய்து ஒரு விஷயம் செய்யுங்கள், என் தொலைபேசியில் நேரடியாக என்னை அழைக்கவும்.
அஜித் பவார்- ஒரு நிமிஷம்… உங்க மேல நானே நடவடிக்கை எடுக்கிறேன்… இப்போ நானே உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னை நேரடியா கூப்பிடச் சொல்றீங்க
அஞ்சலி கிருஷ்ணா- சார், நீங்கதான்னு எனக்கு எப்படித் தெரியும் சார்… சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது.. ஆனா எனக்கு
அஜித் பவார்- கேளு-கேளு.. நீங்க என்னைப் பார்க்கணும்னு நினைக்கிறீங்க, சரியா… உங்க நம்பரைக் கொடுங்க இல்லன்னா ஒரு வாட்ஸ்அப் கால் பண்ணுங்க… நான் இங்க இருந்து சொல்றேன்
அஞ்சலி கிருஷ்ணா- சரியா சார்
அஜித் பவார்- நீங்க என் முகத்தை அடையாளம் கண்டுகொள்வீங்க, சரியா
அஞ்சலி கிருஷ்ணா- சரியா சார்
அஜித் பவார்- நீங்க இவ்வளவு தைரியமா இருக்கீங்களா
அஞ்சலி கிருஷ்ணா- சார் எனக்கு மேல எடுத்த நடவடிக்கை பத்தி எனக்கு எப்படித் தெரியும்
அஜித் பவார்- உங்க நம்பரைக் கொடுங்க
அஞ்சலி கிருஷ்ணா- சார் எனக்குத் தெரியாது சார்
அஜித் பவார்- நான் துணை முதல்வர்
அஞ்சலி கிருஷ்ணா- சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது
அஜித் பவார்- உங்க போன் நம்பரைக் கொடுங்க.
அஞ்சனா கிருஷ்ணா, 2022-23 UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் AIR 355 பெறுபேறு பெற்று, தற்போது சோலாப்பூரில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பிஜு ஒரு சிறிய ஆடைத் தொழிலாளராக செயல்படுகிறார். பள்ளிப் படிப்பை பூஜப்புராவில் முடித்த அவர், நீரமன்கரா NSS மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்து, நேர்மை மற்றும் நிர்வாகத் திறனுக்காக புகழ்பெற்றுள்ளார்.
எந்த அரசியல் அழுத்தத்தையும் அச்சமின்றி எதிர்கொண்டு, சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்ட அஞ்சனா, தற்போது சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டைப் பெற்று வருகிறார். “இவர் தான் சமூகத்தில் நம்பிக்கை இருக்கிறது” என மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
