தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வரும் நிலையில் வெற்றிக்கான வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பலமாக இருக்கும் நிலையில் போட்டியாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெரும் என்று அதிமுக மற்றும் பாஜக நம்பிக்கையுடன் கூறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவில் உள்ள 25 பிரிவுகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜி நயினார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு பிரபல ஜோதிடர் ஷெல்வி ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதோ அந்த பட்டியல்,