மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒரு  பள்ளியில், இரண்டு குடிபோதையில் இருந்த இளைஞர்கள் பள்ளிக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அந்த இருவர், பள்ளி வளாகத்திற்குள் சென்று, ஆசிரியரிடம் பணம் கேட்டு துன்புறுத்தலுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்த ஆசிரியர்கள் மீது அவர்கள் தாக்குதலுக்கு முயன்றதோடு, மாணவர்களையும் பயமுறுத்தினர். இதில் கற்பித்தல் பணிகள் இடையூறும் வகையில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது உள்ளிருந்த சில பெண்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

“>

இதையடுத்து, அந்த பள்ளியின் ஆசிரியர் வைபவ் குமார் சாஹு கல்வித்துறையிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். இதில், பள்ளி வளாகத்திற்குள் குடிபோதையில் நுழைந்து மாணவர்களின் பாதுகாப்பை காப்பாற்ற முடியாத சூழ்நிலையை காரணமாகக் காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.