மலேசியாவின் தெமர்லோ பாலத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நிகழ்ந்த ஒரு விபத்து தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பைக் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், அவரது பைக் நேரடியாக டிவைடரில் மோதியது. மோதும் வேகத்திலேயே அவர் காற்றில் பறந்து சாலையில் வந்த காருக்குக் கண் முன்னே விழுந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Smart Local Malaysia (@thesmartlocalmy)

இந்த சம்பவம், அருகில் வந்த காரின் டாஷ்காமில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் நிதானமாக சென்ற மோட்டார் சைக்கிள், டிவைடரை தொட்டதுமே கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி வாகனப் பாதையில் விழுந்தார். ஆனால் அதே நேரத்தில் எதிரே வந்த கார் டிரைவர் நிதானமாக பிரேக் போட்டதால், மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விழுந்த உடனே பைக் ஓட்டுநர் ரோட்டில் புரண்டு, உயிர் பிழைத்தார்.

இதையடுத்து அருகில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பிற பைக் ஓட்டுநர்கள் உடனே நின்று உதவி செய்தனர். காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து, சாலையைச் சீர்செய்தனர். இந்தக் காணொளியை “thesmartlocalmy” என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். “கடவுள் உயிர் தந்திருக்கிறார், இனி சாமர்த்தியமாக இரு” என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர், “டிவைடரைக் குறை சொல்வது ஏன்? வேகமே காரணம்!” என பதிவிட்டிருந்தார்.