சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்து X தளத்தின் பதிவுகள் அடிப்படையில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் 2-வது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்திய நடிகர் விஜய், இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பட்டியலில் பிரபலங்கள்
4-வது இடத்தில் தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், 5-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், 6-வது இடத்தில் ராகுல் காந்தி, 7-வது இடத்தில் விராட் கோலி, 8-வது இடத்தில் மகேஷ் பாபு, 9-வது இடத்தில் தோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10-வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். இது விஜயின் சமூக ஊடக செல்வாக்கு மற்றும் அவருக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவை காட்டும் முக்கியமான எடுத்துக்காட்டு என குறிப்பிடப்படுகிறது.
