உத்தரப்பிரதேச மாநிலம் முஜப்பர்நகர் மாவட்டத்தை சேர்ந்த வங்கி ஊழியர் சஞ்சய், தனது முதல் மனைவியிடமிருந்து பிரிந்து, கவிதா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருந்தார். ஆனால், இந்த இரண்டாவது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. சொத்துக் பிரச்னை, கணவனின் பழைய குடும்பத்தினரிடம் அதிக பாசம் காட்டுவதைவும் காரணமாக கொண்டு, மனைவியான கவிதா கணவன் மீது கடும் வெறுப்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய், பெற்றோர் மற்றும் முதல் மனைவியின் மூன்று குழந்தைகள் மீது அதிக அக்கறை கொண்டவர். ஆனால், மனைவி கவிதா, கணவன் சம்பாதித்த பணத்தை தன் தேவைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன், அவரை அடிக்கடி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஜூலை 26ஆம் தேதி, குடும்பம் சமாலியில் உள்ள ஒரு பாபாவை சந்தித்து சஞ்சயின் மது பழக்கத்தை விட்டுவிட முயன்றது. சில நாட்கள் சரியாக இருந்தாலும், பின்னர் சஞ்சய் மீண்டும் பழைய பழக்கத்தில் திரும்ப, கவிதாவின் மனம் முற்றிலும் மாறியதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு, சஞ்சய் தனது வீட்டு முன்னிலையிலுள்ள கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது 2 வது மனைவி கவிதா, வீட்டிலுள்ள பிள்ளைகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சூழலில், ஒரு கயிறு மூலம் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
சஞ்சய் உடலில் பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டதாக தெரிய வந்தது. பின்னர், தற்கொலை போல காட்சியமைக்க முயன்ற கவிதா, கணவனை தூக்கில் தொங்கவிட்டும் , அத்துடன் ‘ஹார்ட் அட்டாக்’ என்று உறவினர்கள் முன்னிலையில் நாடகமாடியும் இருக்கிறார்.
ஆனால், முதல்க் மனைவியின் மகன் நிஷூ சந்தேகம் அடைந்துள்ளார். இறுதிச் சடங்கு செய்யும் முன் சஞ்சயின் உடலை நீராட வைக்கும் போது, உடலில் இருந்த காயங்களால், குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், கவிதாவை கைது செய்து, தீவிர விசாரணையில் அவர் கொலை செய்ததை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
