விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இபி சாலையில் வசிக்கும் முனுசாமியின் மகள் மோகனபிரியா (14), அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை, தாயிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டபோது, தாய் “நாளைக்கு செய்து தருகிறேன்” என்று கூறியதால் மனமுடைந்த மாணவி, வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.