ஜெய்ப்பூரில் உள்ள கோபால்புரா பகுதியிலுள்ள குரு கிரிபா கோச்சிங் சென்டரில், சூரு மாவட்டத்தை சேர்ந்த 19 வயது நீட் தேர்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து குதிக்க முயன்ற மாணவியை, அங்கு இருந்த ஒரு ஆசிரியர் பின்புறம் விரைந்து சென்று தடுத்து உயிர் காப்பாற்றியுள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகேஷ் நகர் போலீசார் கூறுகையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் அந்த மாணவி மேல்தளத்தில் சென்று சுவர் மீது ஏறி குதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலமுறை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டபோதிலும், தற்கொலை செய்யும் எண்ணத்தில் உறுதியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. கூட்டம் சாலையில் திரண்ட நிலையில், மாணவி திசைதிருப்பி நிற்கும்போது, பின்புறம் விரைந்து சென்ற ஆசிரியர் அவளை இறுக்கமாக பிடித்து கீழே இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.
जयपुर के गोपालपुरा में NEET की छात्रा ने कोचिंग की बिल्डिंग से कूदकर आत्महत्या की कोशिश की, लेकिन स्टाफ की सतर्कता से समय रहते बचा लिया गया…
#Jaipur pic.twitter.com/WdEyJOsJIW— य से यशस्वनी 🌸 (@YashaswaniShar3) August 30, 2025
“>
ஊடகங்களில் வெளியாகிய தகவலின்படி, அந்த மாணவி கடந்த சில மாதங்களாக கோச்சிங் டெஸ்ட்களில் முறையாக பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் நேரடியாக கோச்சிங் மையத்துக்கு வந்து விசாரித்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய மாணவி, அங்கு சுத்தம் செய்யும் பணியின் காரணமாக திறந்திருந்த மேல்தள கதவின் வழியாக சென்றுள்ளார்.
தாங்க முடியாத அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
