சென்னை சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த திமுக மீனவர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பிரவீன், தன்னுடன் இருந்த ஆதரவாளர்களுடன் திடீரென கட்சியை விட்டு விலகி, அதிமுகவில் இணைந்துள்ளார்.

விசேஷமாக, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகம் முன்பே, வாகனங்களில் இருந்த திமுக கொடிகளை இறக்கி வைத்து, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

உதயநிதியின் சொந்தத் தொகுதியிலேயே திமுகவினர் விலகி அதிமுகவுக்கு செல்வது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக-அதிமுக இடையே கடும் போட்டி  நிலவி வரும் நிலையில், சேப்பாக்கத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், எதிர்கால அரசியல் சூழலுக்கு முக்கிய சுட்டிக்காட்டாக கருதப்படுகிறது.