நாட்டின் சிறந்த முதல்வர்கள் குறித்து இந்தியா டுடே – C Voter நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், மாநிலங்களின் முதல்வர்களின் செயல்திறன், மக்கள் நம்பிக்கை, திருப்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் படி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, 44.6% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்ததாக சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலங்களில் ஆட்சி நடத்தும் முறையும், மக்களின் திருப்தியும் எந்த அளவிற்கு உள்ளன என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.