பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராகவும், புகழ்பெற்ற சமையல் கலைஞராகவும் விளங்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், கடந்த ஜூலை 26 அன்று, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தனது இன்ஸ்டாகிராமில் மாதம்பட்டி ரங்கராஜுடன் கோயிலில் திருமண உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “Mr & Mrs Rangaraj” என்று குறிப்பிட்டார்.
மேலும், “Baby loading 2025” என அறிவித்து, தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பதிவு, ஸ்ருதி இன்னும் “Madhampatty Rangaraj’s wife” என பயோவை மாற்றாமல் அமைதி காத்த நிலையில், பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை கோயிலில் தன்னை திருமணம் செய்து, தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
