ரஷ்யாவில்  நெடுஞ்சாலையில்  நடந்த  விபத்தில், திரவமாக்கப்பட்ட கார்பன் டைஆக்சைடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சுமார் பத்து புதிய கார்களை ஏற்றிச் சென்ற கார் கேரியர் மீது மோதியதில் பெரும் விபத்து  ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் திகிலூட்டும் காட்சிகள் எதிரே வந்த வாகனத்தில் அமைந்திருந்த டேஷ்கேமில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

விபத்தில் ஏற்பட்ட வெடிப்பால், கேரியரில் ஏற்றப்பட்ட கார்கள் தீப்பந்தமாக எரிந்தன. லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும், வெடிப்பின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் காரில் இருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“>

திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்து காரணமாக நெடுஞ்சாலையில் பெரிய  போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.